Snapseed Creative Fire Wings Photo Editing-தமிழ்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Snapseed செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு சிறப்பான போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது என்றும் மற்றும் அதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்றும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


Step 1:
முதலில் Snapseed செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் Snapseedன் அனைத்து Toolம் காணப்படும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

Step 2:
போட்டோவை தேர்வு செய்தவுடன் கீழ் பகுதியில் இரண்டாவதாக உள்ள Tools என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவது வரிசையில் நான்காவதாக உள்ள Vintage என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதில் வெவ்வேறு வகையான கலர் பில்டர் ஆப்ஷன்கள் இருக்கும். அந்த ஆப்ஷன்களில் மீது விரலை வைத்து வலது புறம் இருந்து இடது புறமாக தள்ளும்போது வெவ்வேறு வகையான ஆப்ஷன்களை பார்க்க முடியும் இதில் கடைசியாக உள்ள ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்தவுடன் இதில் நடுப்பகுதியில் கலர் பில்டரை Adjust செய்வதற்கான ஆப்ஷன் ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதில் நான்கு ஆப்ஷன்கள் தோன்றும் அதில் இரண்டாவதாக உள்ள Saturation என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அதன் அளவை முற்றிலுமாக குறைத்து -100ல் வைத்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் √ இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் கீழ்ப்புறத்தில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள View Edits என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் வலது புரத்தின் கீழ் பகுதியில் Vintage என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதற்குக் கீழ் பகுதியில் < இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் அதற்கு அருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொடவும்.
தொட்டவுடன் இடது புறத்தில் கீழ்பகுதியில் × இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதன் அருகிலுள்ள ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று முகம் கை கால் அதாவது தோல் தெரியும் இடத்தினை மட்டும் அழித்து கொள்ளவும்.


அழித்தபின் வலது புறத்தில் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் இடது புறத்தின் மேல் பகுதியில் <-- இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 3:
நிலை இரண்டை முடித்தவுடன் கீழே உள்ள Tools ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் கடைசி வரிசையில் இரண்டாவதாக உள்ள Double Exposure ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் கீழ்பகுதியில் முதலாவதாக போட்டோவை சேர்ப்பதற்கான ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த நெருப்பு இறக்கை இருப்பது போன்ற போட்டோவை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்தவுடன் கீழ் பகுதியில் மூன்று ஆப்ஷன்கள் தோன்றும் அதில் நடுப்பகுதியில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் நான்காவதாக உள்ள Add ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் அந்த போட்டோவை நகர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாகப் வைத்து கொள்ளவும். வைத்தபின் வலது புறத்தில் கீழ் பகுதியில் √ இதுபோன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.
தொட்டவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் முதலாவதாக உள்ள Edit Stack என்ற ஆப்ஷனை தொட்டவுடன் கீழ்ப்பகுதியில் நான்காவதாக தோன்றும் View Edits ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் வலதுபுறத்தில் மேல்பகுதியில் Dobule Exposure என்ற ஆப்ஷன் இருக்கும் அதற்கு கீழ் பகுதியில் < இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதை தொட்டவுடன் அதனருகில் தோன்றும் மூன்று ஆப்ஷன்களில் நடுவில் உள்ள ஆப்ஷனை தொடவும்.
தொட்டவுடன் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் × இதுபோன்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதன் அருகிலுள்ள ஆப்ஷனை தொட்டவுடன் இடது புறத்தில் கீழ்பகுதியில் கீழ்நோக்கிய குறியீடு ஒன்று இருக்கும் அதை நான்குமுறை தொடவும். தொட்டபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று நமது போட்டோவில் குறிப்பிட்ட நமது உருவத்தில் உள்ள அந்த சிவப்பு நிறத்தை அழித்துக் கொள்ளவும்.


அழித்தபின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீட்டை தொட்டவுடன் இடது புறத்தில் மேல் பகுதியில் பின் செல்வதற்கான ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும்.

Step 4:
முதலில் கீழே உள்ள Tools ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் மூன்றாவது வரிசையில் முதலாவதாக உள்ள Selective ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் உங்கள் முகத்தின் மீது தொடவும் தொட்டபின் B என்ற ஒரு வட்டம் தோன்றும் இப்பொழுது உங்கள் இரண்டு விரலினை போட்டோவின் மீது வைத்து தேய்க்கும் போது ஒரு வட்டம் ஏற்படும் அந்த வட்டத்தை உங்கள் முகத்தை சுற்றி வரும் அளவில் வைத்துக் கொள்ளவும். வைத்தபின் Brightnessஐ அதிகரித்து உங்களுக்கு தேவையான அளவில் பொருத்தி கொள்ளவும். இதேபோன்று உங்களுடைய கை மற்றும் கால்களில் இதனை பொருத்தி உங்களுக்கு தேவையான Brightness அளவை அதிகரித்துக் கொள்ளவும். அதிகரித்த பின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குறியீட்டை தொடவும்.


Download Now

Post a Comment

0 Comments