வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் PicsArt செயலியை பயன்படுத்தி நமது சாதாரண போட்டோவை கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று ஒரு சிறப்பான போட்டோவாக எவ்வாறு எடிட் செய்வது மற்றும் அதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் பார்ப்போம்.
இந்த PicsArt செயலி Android போனில் ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் செயலி ஆகும். இந்த ஒரே செயலை பயன்படுத்தி நமது போட்டோவை பல்வேறு வகையாக எடிட் செய்து கொள்ளலாம் மற்றும் இதில் பலவகையான கலர் பில்டர்கள் மற்றும் நமது போட்டோவின் Backgroundஐ அழிப்பதற்கான ஆப்ஷன்கள் உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி நமது போட்டோவை எவ்வாறு எளிமையான முறையில் எடிட் செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம். இந்த போட்டோவை எடிட் செய்வதற்கு தேவையான Background மற்றும் Pngஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Step 1:
முதலில் PicsArt செயலியை திறக்கவும் திறந்தவுடன் அதன் கீழ்ப்பகுதியில் + இது போன்ற ஒரு குறியீடு ரோஸ் நிறத்தில் இருக்கும்.அதை தொடவும். தொட்டவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Edit a Photo என்பதை தொடவும். தொட்டவுடன் உங்களை Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் பதிவிரக்கம் செய்த Background போட்டோவை தேர்வு செய்யவும்.
Step 2:
தேர்வு செய்தவுடன் PicsArt செயலியின் முக்கியமான எடிட்டிங் பக்கத்திற்கு அழைத்துச் அங்கு கீழ்பகுதியில் எடிட் செய்வதற்கு தேவையான அனைத்து வகையான Toolம் இருக்கும்.அந்த Tool ஆப்ஷன்களில் மீது விரலை வைத்து வலதுபுறமிருந்து இடதுபுறமாக தள்ளும்போது வெவ்வேறு வகையான Tool ஆப்ஷன்கள் இருக்கும்.இதில் Add Photo என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் அது உங்களை Galleryகு அழைத்துச் செல்லும் அங்கு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களுடைய போட்டோவை தேர்வு செய்தபின் வலது புறத்தின் மேல் பகுதியில் Add என்பதை தொடவும்.
Step 3:
நிலை இரண்டை முடித்தவுடன் அடுத்த பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்த போட்டோ வரும் அடுத்ததாக மீண்டும் அதே போன்று கீழ் பகுதியில் இருக்கும் ஆப்ஷன்களில் add போட்டோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த போட்டோவை தேர்வு செய்யவும். தேர்வு செய்த பின் அதனை நகர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக பொருத்திக் கொள்ளவும்.
பொருத்திய பின் வலது புறத்தின் மேல் பகுதியில் இதுபோன்ற √ ஒரு குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்ட பின் மீண்டும் இதே போன்று கீழ் பகுதியில் உள்ள ஆப்ஷன்களில் add photo என்ற ஆப்சனை கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச்செல்லும் அங்கு நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த போட்டோவை ஒவ்வொன்றாக சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்று சரியாக பொருத்திக் கொள்ளவும்.
பொருத்திய பின் வலது புறத்தில் மேல் பகுதியில் உள்ள குறியீட்டை தொடவும்.
Step 4:
நிலை 3 முடித்தவுடன் அடுத்ததாக கீழ்ப்பகுதியில் உள்ள ஆப்ஷன்களில் இரண்டாவதாக உள்ள tool என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அதற்கு மேல் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் மூன்றாவது வரிசையில் மூன்றாவதாக உள்ள adjust என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்ததாக கீழ் பகுதியில் தோன்றும் ஆப்ஷன்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் சரியாக பொருத்திக் கொள்ளவும்.
Saturation = 10
Highlights = 10
Shadow = 10
இதன் அளவுகளை சரியாக பொருத்திய பின் வலது புறத்தில் மேல் பகுதியில் உள்ள குறியீட்டை தொடவும்.
Step 5:
அனைத்து எடிட்டிங்கையும் முடித்தவுடன் நிலை ஐந்தில் நமது போட்டோவை எவ்வாறு save செய்வது என்று பார்ப்போம். முதலில் மேல்பகுதியில் நடுவில் கீழ் நோக்கிய அம்புக் குறி போன்று ஒன்று இருக்கும் அதை தொட்டவுடன் நீங்கள் இப்போது எடிட் செய்து வைத்திருந்த போட்டோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.
Background & Pngஐ பதிவிரக்கம் செய்யும் முறை:
முதலில் கீழே உள்ள Download Here என்பதை தொடவும் தொட்டவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Background Image மற்றும் Pngஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments